அணையாத தீபங்கள்

கரும்புலி லெப்டினன்ட் கண்ணன்

1991ம் ஆண்டு 9ம் மாதம் மணலாற்றில் ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் போராளிகளும் சண்டைக்கத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார்கள. சத்துருக்கன் சின்னவன் என்ற காரணத்தால் பொறுப்பாளர் அவனைச் சண்டைக்கு அனுப்பவில்லை. உடனே அவரிடம் சென்ற, “நீங்கள் ஏன் என்னைக் கழித்துவிட்டீர்கள்? ஏன் நான் சண்டை பிடிக்காமாட்டேனோ? இப்படித்தான் நீங்கள் என்னைப் பலமுறை ஏமாற்றி விட்டுச் சண்டைக்கு சென்றீர்கள் ஆனால் இந்த முறை என்னையும் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்று அடம் பிடித்து சண்டைக்குச் சென்றான்.

இவன் பிறந்த இடம் கூடலும் கடல் சார்ந்த நிலமுமான ஒரு நெய்தல் நிலமுமான ஒரு நெய்தல் கிராமமாகும். உடுத்துறைக் கடல் அலையின் நுரை சிதறிக் காய்ந்த பெரும் மணல் வெளியில், காலைக் கதிரவன் கண் விழிக்கும் வேளையில், நவரத்தினம் தம்பதிகளின் புதல்வனாய் 1975ம் ஆண்டு ஆவணி மாதம் 24 ம் திகதி தமிழீழ மண்ணில் வந்துதித்தான். தாய் தந்தையர் இவனுக்கிட்ட பெயர் நேசகுலேந்திரன். வீட்டில் செல்லமாக வசந்தன் என அழைக்கப்படுவான். இவனது குடும்பமோ ஒரு வறிய குடும்பமாக இருந்தது.

1981ம் ஆண்டு உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தான். இவன் படிப்பில் மிகவும் அக்கறையாகவும், விளையாட்டில் சுறுசுறுப்பாகவும் இருந்தான். சமூக வேளைகளிலும் முன்னின்று செயற்படுவான். பள்ளியில் படிக்கும் போது வீட்டு வறுமையின் காரணத்தால், தனது அண்ணனுடன் கடற்தொழிலுக்குப் போய் வருவான். ஆனாலும் இவன் தனது படிப்பை கைவிடவில்லை. வசந்தனின் அண்ணன் எமது இயக்கத்திற்குப் படகோட்டியாகச் செல்வார். ஒரு நாள் ஒட்டியாகச் சென்றவர் திரும்பி வரவேயில்லை.

என்ன நடந்தது என்று இன்றுவரையும் தெரியவில்லை. தாய், தனது மகனைக் கடற்கரையில் வழிமேல் விழிவைத்துப் பார்த்தவாறு சிலநாட்கள் காத்திருந்தாள்; ஆனால் இன்னமும் தான் வரவில்லை.

அதன் பின்னர் அவன் தனியாகவே கடற்தொழிக்குச் சென்றுவருவான். ஒருநாள் வசந்தன் கடற்தொழிலுக்குச் செல்லும்போது தாய் மறித்தார் “நீ தனியாகக் கடலுக்குப் போகவேண்டாம்” என்றார். அப்போது அவன் அம்மாவுக்குச் சொன்னார். “நேவி வந்தால் நான் நீந்தி வந்துவிடுவன் நீங்கள் கொஞ்சம் பேசாமல் இருங்கோ” இவ்வாறு கூறிவிட்டு அவன் வழமைபோல் கடலுக்குச் சென்று வருவான்.

அந்தவேளையில் தான் இந்திய ஆக்கரமிப்புப்படை எமது மண்ணில் காலடி வைத்தது இந்திய தமிழீழப்போர் ஆரம்பமாகியது. அவ்வேளையில் அவனது குடும்பத்தினர் எமது இயக்கத்தின் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எமது இயக்கத்தின் வெடி மருந்தகளை வீட்டு வளவினுள் பதுக்கிவைத்துப் பாதுகாத்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் இந்திய இராணுவமும், தேசத் துரோகிகளும், உடுத்தறைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். அன்று வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்து, அவனது தகப்பனை “எல்.ரி.ரி.ஈ இங்கு வந்ததா?” எனக்கட்கும் போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தேசத்துரோகி, “இவங்கள் இயக்கத்திற்கு ஆதரவு; இவங்களை விடாதையுங்கோ” என்று சொன்னான். ஆத்திரமடைந்த இந்திய இராணுவத்தான் ஒருவன் வசந்தன் தகப்பனுக்க அடித்தான். உடனே வசந்தன் “அப்பாவுக்கு அடியாதையுங்கோ” என்று கத்தியபடி தகப்பனைக் கட்டிப்பிடித்தான். அதன் பின் இந்திய இராணுவம் அவனது வீட்டை விட்டு வெளியே சென்றது. அதன் பின்னும் அவனது குடும்பத்தினர் இயக்கத்திற்கு உதவிகள் பல செய்துவந்தனர்.

இப்படித்தான் ஒருநாள் வசந்தன் ஆடு மேய்க்கச் செல்லும்போது, வசந்தனின் கிராமத்து கோயிலுக்குச் அருகிலுள்ள பற்றை ஊடாக ஒரு போராளி ஓடி வந்தான். அப்போது வசந்தன் அந்தப்போராளியைப் பார்த்த, “என்ன அண்ணை ஓடி வாறியள்? என்ன நடந்தது?” எனக் கேட்டான்.

அதற்கு அந்த போராளி, “என்னை ஆமி கலைச்சுவாறான்” என்று கூறவே, உடனே வசந்தன் அந்தப் போராளியைத் தனது வீட்டுக்குச் கூட்டிச் சென்று, வீட்டின் மூலையில் இருக்கவிட்டு, வலையினால் மூடிவிடுகிறான். அப்போது இந்திய இராணுவம், தேசத்துரோகிகளும் காலடிகளைப் பார்த்து வசந்தனின் வீட்டிற்கு வந்தனர். வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்ததும் வீட்டைச் சோதனையிட்டார்கள். அப்போது ஒரு தேசத்துரோகி வசந்ததைப் பிடித்து, “முலையில் ஏனடா வலையைக் குவித்து வைத்திருக்கிறாய்? வலைக்கள் என்னடா இருக்காது?” என்று அதட்டிக் கேட்டான். அதற்கு வசந்தன் “வலைக்குள் ஒண்டும் இல்லை… அப்படியெண்டால் நீங்கள் எடுத்துப்பாருங்கோ” எனத் தளராது பதில் கூறினான்.

அதன் பின் தேசத்துரோகி வசந்தனின் தாயாரிடம், “இஞ்சை இயக்கம் வாறது என்று அறிஞ்சனாங்கள்; உங்களைக் கவனிக்கிறம்” என்று சொல்லிவிட்டு சென்றான். அதன் பின் 1990ம் ஆண்டு முற்பகுதியில், இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேறியது.

எமது மக்கள்பட்ட இன்னல்களைக் கண்டு வசந்தனின் உள்ளம் குமுறியது. துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தினிலே தூய விடுதலைக்காய் துப்பாக்கியினைத் தோளில் ஏந்தத் துணிந்துவிட்டான். அந்த வகையில்தான் 1990ம் ஆண்டு பங்குனி மாதம், எமது இயக்கத்தில் தன்னை முழுநேர உறுப்பினாராக இணைத்துக்கொள்கிறான். சத்தருக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டு, பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பயிற்சி பாசறையில் சிறுவனாக இருந்தாலும், எந்தப் பயிற்சியினையும் ஓர்மத்துடனும் சலிப்பிலாமலும் எடுத்து முடித்தான். பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்ததும், இவனும் இன்னும் சில போராளிகளும் ஒரு முகாமில் இருந்தார்கள். பின்னர் இவனுடைய திறமையைக் கண்ட பொறுப்பாளர், இவனைப் பலாலி காவலரணுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே இவன் இருக்கும்போது, எமது கண்ணிவெடிப் பிரிவினர் கண்ணிவெடி வைக்க போகும்போது அவர்களுடன் சென்று கண்ணிவெடிகள் வைப்பான். கண்ணிவெடிகளைப் பற்றி அறியும் ஆர்வத்தில் மற்றைய போராளிகளிடம் கேட்டு அறிவான்.

1991 ஆம் ஆண்டு 12 ம் மாதம் பலாலி இராணுவம் வளலாய்ப் பகுதியை நோக்கிய ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தச் சண்டையில் திறமையடன் சண்டை செய்தான் சத்துருக்கன். அதன் பின் ஒரு காவலரனுக்கு தலைமை தாங்கி, அங்கு ஒரு சில மாதங்கள் இருந்தான். அதன் பின்னர் வடமராட்சிக் கிழக்கு பகுதி காவலரணுக்கு அழைத்த செல்லப்பட்டு, வெற்றிலைக்கேணி காவலரண் பகுதியில் இடம் தெரியாத போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தான். அவன் எல்லாப் போராளிகளிடமும் அன்பாக பேசிப் பழகுவான். போராளிகளுடன் சேர்ந்து சிரிப்பூட்டும் பகிடிகளும் விடுவான். அங்கே போராளர்களுக்கு இடங்களைக் காட்டியபின், 1992ம் ஆண்டு 7ஆம் மாதமளவில், வடமராட்சி கோட்ட பொறுப்பாளர் மேஜர் பிறேமநாத் அண்ணாவால் இவனும் இன்னும் சில செய்யப்பட்டு வேவுப் பயிற்சி அளிக்கப்பட்டு வளலாய்க் காவலரணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது அவன், தனக்குக் கொடுக்கப்பட்ட வேவுப்பணியில் மிகவும் திறமையடன் செயற்பட்டான். இவன் வேவுக்குச் சென்று எதிரியின் காவலரணுக்கு முன்னுள்ள கம்பிவேலிக்கு உட்பகுதியில் எதிரி புதைத்து வைத்த மிதிவெடிகளை எடுத்து வருவான். வேவுக்கு சென்று எதிரியின் நடமாட்டத்தை அவதனிக்கும் போது இராணுவம் சத்தம் போட்டுக் கதைத்தால், மற்றைய போராளிகளுக்குச் சொல்லுவான். “இப்ப கதைக்கிறார்; இன்னும் கொஞ்ச நாளிலை தெரியும் எங்கட விளையாட்டு” என்று.

இவன் வேவுக்குச் செல்லும் போது பல நாட்கள் சாவின் விளிம்பில் ஏறி நடந்தான். ஊருறங்கும் நேரத்தில் எதிரியின் பாசறையில் தகவல் பெற்றிட சிறந்த வேவு வீரனாக இவன் திகழ்ந்தான். வேவுக்குச் செல்லும் போது பல தடைவைகள் மரணம் இவளோடு மல்லுக்கட்டியது; வெல்ல முடியவில்லையே என்று வேதனைப்பட்டது சத்துருக்கனின் ஆசை போல், பலாலி கிழக்கு வளலாய்ப் பகுதியில் 150 காவலரண்கள் எம்மவர்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

அந்தச் சண்டை முடிந்தவுடன் தனது பொறுப்பாளரிடம் சென்று, “நான் கரும்புலிக்குப் போகபோறன்” என்று கேட்டு, அவன் கரும்புலிக்குச் சென்றான். கரும்புலிகளுக்கான பயிற்சியினை முடித்துவிட்டு கரும்புலி அணியின் ஒரு குழுத் தலைவானக தொண்டமனாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவர்களது இலக்கு பலாலி விமான நிலையத்தை ஊடுருவித் தாக்கி அழிப்பதே! சத்துருக்கன் என்னை இறுதியாக தொண்டமனாற்றில் வைத்துச் சந்தித்ததான். அப்போது என்னுடன் கதைக்கும் போது “இனி எங்கட மக்கள் சுதந்திரமாக வாழப்போகிறார்கள். தமிழன் தலைநிமிர்ந்து நடக்கப் போகிறான். அதற்கு நாங்கள்தான் வழிகாட்டியாக இருக்கப்போகிறோம் “ என்று சொன்னான்.

அன்று மாலை; கடல் அலைகள் ஓய்வ எடுத்தக்கொண்டிருந்தன. ஆனால் கரும்புலிகள் ஓய்வெடுக்கவில்லை; தமது இலக்கை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டனர். என்னவோ கடலன்னைக்கு பொறுக்கவில்லை போலும். திடிரென நீரோட்டம் அதிகமா இருந்தது. ஆனாலும் கரும்புலிகள் தமது முயற்சியைக் கைவிடவில்லை. விடியற் காலை 4.00 மணியிருக்கும் ஈ கூட நுழையமாட்டாது எனக் கூறிக்கொண்டிருந்த அந்தச் சிங்கத்தின் குகைக்குள், சிறுத்தைக் கூட்டம் நுழைந்து கொண்டிருந்தது. இவர்கள் தாக்குதலுக்கச் சென்ற நேரம் தவறிவிட்டது. இவர்களின் தாக்குதல் திட்டமும் மாறிவிட்டது.

மறுநாள் காலை 9 மணி இவர்கள் விமான நிலையத்தில் இருந்து சற்றுத் தொலைவில் எதிரியை அவதானித்தபடி இருந்தார்கள். அப்போது ஒரு நாய் அவர்களை நோக்கி வந்தகொண்டிருந்தது. அதன் பின்னால் ஒரு இராணுவம் சிப்பாயும் வந்துகொண்டிருந்தான். அதன் பின்னால் ஒரு இராணுவச் சிப்பாயும் வந்து கொண்டிருந்தான். இவர்களைக் கண்டுகொண்டான். அவன் இவர்களைக் காணாது மாதிரி பின்னுக்குச் சென்று பின்னர் பல இராணுவத்தினரை கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்தான். தங்கள் கிளையோடு கிளம்பிய அவர்கள், ஆயிரம் ஆயிரம் கைகளில் ஆயுதங்களைப் பிடித்தபடி, ஆகாயத் ‘தும்பிகளின்’ துணையோடு அந்த இடத்திற்கு வந்தனர். அப்போதுதான் போர் மூண்டது. சத்துருக்கனின் அணியினர் தாக்குதலை தொடுத்தனர். அந்த இடத்திலேயே பல இராணுவத்தினர் கொல்லபப்பட்டனர். அப்போது எதிரி தாக்கிய 40 எம் எம் பிஸ்டல் குண்டு ஒன்று சத்துரக்கனின் இரு கால்களையும் பதம் பார்த்து உடனே மற்றைய போராளிகளுக்கு சத்துருக்கன் கட்டளையிட்டான். “எனது இரண்டு கால்களும் போய்விட்டன. நான் குப்பி கடிக்கப் போகிறேன். நீங்கள் மூவ் பண்ணுங்கோ.”

சாவையே குப்பியில் அடைத்த – மரணத்தையே கழுத்தினில் மாலையாக சுமத்தி – சரித்திரம் படைத்துவிட்டான். சாவை முறியடிக்க சிலர் சாத்திரம் பார்க்கும் நேரம், சாவையே முதுகிலேந்தி பாலாலி மண்ணில் சரித்திரம் படைத்தவிட்டான் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். சாவு அவனைச் சந்தித்த போதும் கூட எமது தாய் நாட்டையும், தலைவனையும் தான் அவன் நினைத்திருப்பான்!

தமிழ் பறை பாருங்கள்

சிறப்பு உரைகள்